7 நட்சத்திர ஓட்டல் போல் அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா.. பாஜக வெளியிட்ட வீடியோ..!
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா குறித்த வீடியோவை பாஜக ஐடி விங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் உள்ள பங்களா 7 நட்சத்திர ஹோட்டல் போல இருப்பதாக கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை சாமானியர்களின் பிரதிநிதியாக சொல்லிக் கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையான முகத்தை நாங்கள் காண்பிக்கிறோம் என்று பாஜக ஐ டி வின் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியே ஈடுபட்டுள்ளது.
அந்த வீடியோவில் செவன் ஸ்டார் ரிசார்ட் போல் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டியுள்ள வீடு காட்சி அளிக்கிறது. உடற்பயிற்சி கூடம், குளியலறை, நீச்சல் குளம், பங்களாவில் உள்ள மார்பில் கிரானைட், ஜிம் மற்றும் ஸ்பா ஆகியவை அந்த பங்களாவில் இருப்பதாகவும் இந்த பங்களாவின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்றும் பாஜக ஐட்டங்கள் தெரிவித்துள்ளது.
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வகையில் இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பங்களாவில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் ஆடம்பரமாக இருந்து உள்ளார் என்று பாஜக ஐ டி வி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva