வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (13:31 IST)

போராட்டக்காரர்களை சுட்ட போலீஸ்: வெளியான கலவர வீடியோ!

ஹாங்காங் போராட்டத்தில் மக்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஹாங்காங் கைதிகளை சீன சிறைகளில் நிரப்புவது குறித்த உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக தொடங்கிய போராட்டமானது கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஹாங்காங் வீதிகள் போராட்டகாரர்களால் சூழந்து காணப்படுகிறது. ஹாங்காங் போலீஸ் மக்களை கலைக்க புகை குண்டுகள் வீசுதல், தடியடி நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் வழக்கம் போல போராட்டம் நடைபெற்ற போது போலீஸுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தகறாரு ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்ய முயன்றபோது தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலர் போலீஸின் அத்துமீறலை கண்டித்து இந்த வீடியோவை ஷேர் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹாங்காங் போலீஸ் ‘போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கி அவரது துப்பாக்கியை பிடுங்க முயற்சித்ததாகவும், அதனாலேயே அவர் சுட்டதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞர் இறந்துவிட்டது போல அந்த வீடியோவில் காட்டியிருப்பது போலி எனவும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.