விண்வெளிக்கு போகும் ஹாலிவுட் பிரபலங்கள்! – டிக்கெட் விலை இவ்வளவா?
சமீபத்தில் தொழிலதிபர் ரிச்சர்ட் ப்ராஸ்னன் விண்வெளி சென்று வந்த நிலையில் விண்வெளி செல்வதற்கு ஹாலிவுட் பிரபலங்களும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
விண்வெளி பயணத்தை கமர்ஷியலாக மாற்றும் முயற்சியில் விர்ஜின் கேலக்டிக், ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விர்ஜின் கேலக்டிக் நிறுவனர் ராபர்ட் ப்ரான்ஸ்னன் விண்வெளி சென்று வந்த நிலையில் விர்ஜின் கேலக்டிக் மூலமாக விண்வெளி செல்ல பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
பிரபல தொழிலதிபர்கள் மட்டுமல்லாது பிரபல பாடகர் ஜஸ்டின் பைபர், ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ உள்ளிட்ட பலரும் இந்த விண்வெளி பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ளனராம். இந்த விண்வெளி பயணத்திற்கான ஒரு டிக்கெட் இந்திய விலை ரூ.3.33 கோடி என கூறப்படுகிறது.