1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (11:06 IST)

100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா!

100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா!
மலேசியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததை அடுத்து அந்நாட்டின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மிதந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. இதன் காரணமாக மலேசியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத கனமழை பதிவு செய்திருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் மலேசியாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருவதாகவும் மழை வெள்ள பாதிப்பினால் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் குறித்த வசதிகளை மலேசிய அரசு செய்து தந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.