திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (10:44 IST)

அமெரிக்காவில் LGBTQ சமூகத்தினர் சுட்டுக் கொலை! – க்ளப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Colorado Club
அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கூடும் க்ளப்பில் புகுந்து ஆசாமி நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் கோலராடோ ஸ்ப்ரிங்ஸ் பகுதியில் க்ளப் க்யூ என்ற ஒரு விடுதி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பெரும்பாலும் LGBTQ என்னும் மாற்று பாலினம் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் வந்து செல்வதும், அவர்களுக்குள் உரையாடி கொள்வதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று அவ்வாறாக அவர்கள் க்ளப் க்யூவில் பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியோடு நுழைந்த ஆசாமி ஒருவன் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அப்பகுதிக்கு விரைந்து வந்த கோலராடோ போலீஸார் ஆண்டர்சன் லீ ஆட்ரிச் என்ற அந்த கொலையாளியை கைது செய்துள்ளனர். மாற்று பாலினத்தவர் மீதான வெறுப்பு காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் LGBTQ அமைப்பினர் இந்த படுகொலையை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர்.

Edit By Prasanth.K