தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் நேற்று நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாக, இன்று மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.