வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (14:54 IST)

அன்னைக்கு கேலி செய்த ட்ரம்ப்பை இன்னைக்கு கலாய்த்த சிறுமி க்ரேட்டா! – வைரலாகும் ட்வீட்

2019ம் ஆண்டில் சுற்றுசூழல் செயல்பாட்டிற்காக விருது பெற்ற சிறுமி க்ரேட்டாவை அதிபர் ட்ரம்ப் கேலி செய்த நிலையில், அதே வார்த்தைகளை பயன்படுத்தி தற்போது ட்ரம்ப்பை கிண்டல் செய்துள்ளார் சிறுமி க்ரேட்டா

உலகில் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சிறுமி க்ரேட்டா தன்பெர்க். கடந்த ஆண்டில் பல்வேறு உலகளாவிய கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பேசிய க்ரேட்டா தன்பெர்கிற்கு பல தன்னார்வல நிறுவனங்கள் விருதுகளையும் வழங்கின.

அந்த சமயம் க்ரேட்டாவை கிண்டல் செய்து பதிவிட்ட அதிபர் ட்ரம்ப் “இது அபத்தமானது. சிறுமி க்ரேட்டா கோபத்தை கட்டுப்படுத்த பழக வேண்டும். நண்பர்களோடு போய் ஏதாவது பழைய படத்தை பார்க்க வேண்டும். Chill Gretta Chill” என பதிவிட்டிருந்தார்.

தற்போது அமெரிக்க தேர்தலில் கிட்டத்தட்ட தோல்வியை அடைந்துள்ளதால் நீதிமன்றத்தை நாடியுள்ள அதிபர் ட்ரம்ப், ஜனநாயக கட்சிக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டரில் ட்ரம்ப்பின் அதே நக்கல் வார்த்தைகளை பெயரை மாற்றி பதிவிட்டுள்ள க்ரேட்டா தன்பெர்க் “இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தை கட்டுப்படுத்த பழக வேண்டும். தனது நண்பர்களுடன் பழைய படத்திற்கு செல்ல வேண்டும். Chill Donald Chill” என கலாய்த்து பதிவிட்டுள்ளார்.