திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 செப்டம்பர் 2018 (15:15 IST)

இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலம் பிறந்த முதல் குழந்தை

பிரிட்டனில் பெற்றோர் இறந்துபோன மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தை பெற்றுள்ளனர்.

 
பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர்கள் தங்கள் மகன் மூலம் பேரக்குழந்தை பெற விரும்பினர்.
 
அதன்படி இறந்த மகனின் விந்தணுவை எடுத்து சிறுநீரகவியல் நிபுணர் ஒருவரின் உதவி மூலம் பதப்படுத்தினர். பிரிட்டனில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது சட்ட விரோதம் என்பதால், இந்த விந்தணுவை அமெரிக்க எடுத்துச் சென்றனர்.
 
அங்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து அந்த குழந்தை சட்டப்படி பிரிட்டன் அழைத்து வந்தனர். 2015ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. இறந்தவரின் விந்தணு மூலம் குழந்தை பெற்றெடுத்தது பிரிட்டனில் இதுவே முதல் முறை.