திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (20:21 IST)

குன்றத்தூர் அபிராமியின் கணவருக்கு புதிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்

கள்ளக்காதலனுடன் ஓடிப்போக வேண்டும் என்பதற்காக பெற்ற இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமியின் கொடூர செயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர் அவருடைய கணவர் விஜய். குழந்தைகள் மேல் அதிகபட்ச அன்பு வைத்திருந்த விஜய் இந்த துயரத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தனது தீவிர ரசிகர் என்பதை அறிந்து அவரை நேற்று நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் கூறினார். இந்த ஆறுதல் விஜய்யை ஓரளவுக்கு மன நிம்மதியை தந்திருக்கும்

இந்த நிலையில் குன்றத்தூரில் குழந்தைகளை இழந்த விஜய், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்ர நிர்வாகி சுதாகர் அறிவிப்பு அறிவித்துள்ளார்.