திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (11:51 IST)

வம்சத்தை பாதுகாக்க இறந்த மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தையை உருவாக்கிய பெற்றோர்

பிரிட்டனில் தம்பதியர் ஒருவர் இறந்த தங்களது மகனின் விந்தணுவைப் பயன்படுத்தி வாடகைத் தாயின் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
பிரட்டனைச் சேர்ந்த தம்பதியினர் ஒருவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனால் அவரின் பெற்றோர் அதிர்ந்து போகினர். அந்த வாலிபருக்கு திருமணமாகவில்லை
 
பின் தங்களது வம்சம் இத்தோடு முடிந்து விடக்கூடாது என எண்ணிய அவர்கள் மகனின் விந்தணுவை வைத்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்தனர். அதன்படி நிபுணர் ஒருவர் மூலம் இறந்த மகனின் விந்தணு எடுக்கப்பட்டு, உறைநிலையில் பதப்படுத்தினர். ஆனால் அவர்கள் நாட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் ஆகும். 
 
எனவே அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு சென்று தங்களது மகனின் விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
 
இதனால் தங்களது வம்சம் அழியாமல் பாதுகாத்துள்ளதாக அந்த பெற்றோர் தெரிவித்தனர்.