செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: புதன், 29 மார்ச் 2023 (21:17 IST)

காதல் தோல்வியில் இருந்து வாலிபர்களை மீட்க அரசு புதிய திட்டம்!

Love
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு  நியூசிலாந்து.  இந்த நாட்டில் கிறிஸ் கிப்பின்ஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நாட்டில் காதலில் வீழ்ந்து, அதில் தோல்வியடைந்தவர்கள் சோகம், துன்பம், மனமுடைந்து தற்கொலை எண்ணம், தாழ்வுமனப்பான்மை போன்றவற்றால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதைக் கருத்தில் கொண்டு ஆளும் அரசு, இதிலிருந்து இளைஞர்களை மீட்க முடிவெடித்துள்ளது.

அதன்படி, 'லவ் பெட்டர் 'என்ற திட்டத்தை தொடங்கி, அதைச் செயல்படுத்தி வரும் அரசின் முக்கிய நோக்கம், காதியல் தோல்வியால் குடும்பங்களில் ஏற்படும் வன்முறையைத் தடுப்பதாகும் என்று கூறியுள்ளது.

இதற்கென்று 3 ஆண்டுகளில்  மட்டும் சுமார் ரூ.4 மில்லியன் டாலர் ( 33 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறியுள்ளது.