கள்ளக்காதலன் தற்கொலை செய்த சோகத்தில் காதலியும் தற்கொலை!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் தன் கள்ளக்காதலன் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மஞ்சு(30). இவர் குருகிராமிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அதேபகுதியைச் சேர்ந்த பல்பொருள் அங்காடியில் வேலைசெய்து வந்த திருமணமான பாபுலால் என்பவருக்கும் மஞ்சுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பாபுலால் தன் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தன் கள்ளக்காதலன் பாபுலால் தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்ட மஞ்சு, உடனே தானும் அன்றிரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீப்பற்ற வைத்துக்கொண்டார்,
அருகிலுள்ளோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.