திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (18:31 IST)

1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!

AI technolgy
1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!
உலகிலுள்ள 1000 மொழிகளில் AI தொழில் நுட்பம் உருவாக்க கூகுள் நிறுவனம் மாஸ் திட்டம் இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில ஆண்டுகளாக உலகில் மிக வேகமாக AI தொழில்நுட்பம் பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 நவீன AI தொழில்நுட்பத்தை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர் என்றும் எதிர்காலம் இந்த AI தொழில்நுட்பம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே CHATgpt என்ற AI தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது 1000 மொழிகளில் AI தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. 
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதிற்கான போட்டியில் சாட்ஜிபிடிஐ பின்னுக்கு தள்ள இந்த புதிய முயற்சியை கூகுள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva