புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (17:26 IST)

கூகுள் டூடுலை யாராவது கவனித்தீர்களா?

இன்றைய கூகுள் முகப்புப் பக்கத்தில் தூசி உறிஞ்சும் கருவியை கண்டுபிடித்தவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டூடுல் இடம்பெற்றுள்ளது.

 
தினமும் அன்றைய நாளின் சிறப்பனை உணர்த்தும் வகையில் கூகுள் நிறுவனம் அதன் முகப்புப் பக்கத்தில் டூடுலாக வடிவமைப்பது வழக்கம். பிரபலமானவர்களின் பிறந்தநாள், வரலாற்றில் இடம்பெற்ற செயல்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட சிறந்தவை நினைப்படுத்தும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் இன்றைய டூடுல் வேக்கம் க்ளீனர் கண்டுபிடித்தவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக வேடிக்கையாக புதிய சித்தனையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. 
 
ஹூபெர்ட் செசில் பூத் என்ற பிரிட்டன் பொறியாளர் 1901ஆம் ஆண்டு வேக்கம் க்ளீனர் என்ற சுத்தம் செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இவர் 1871ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி பிறந்தார். 1955ஆம் ஆண்டு 14 ஜனவரி அன்று காலமானார்.