1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (10:55 IST)

ஆபாச வீடியோ அதிகம் பார்ப்பவர்களுக்கு கூகுள் விடும் எச்சரிக்கை

சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதிலும், கூகுள் குரோம் பிரெளசரில் ஹிஸ்ட்ரியில் பதிவு செய்யாமல் பார்க்கப்படும் புதிய வசதியான 'இன்காக்னிட்டோ' என்ற வசதியை பயன்படுத்தி பலர் ஆபாச வீடியோவை பார்ப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நம்முடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் இல்லாமல் பொதுவான கம்ப்யூட்டரில் நாம் பிரெளசிங் செய்யும்போது இந்த 'இன்காக்னிட்டோ' வசதியை பயன்படுத்தினால் நான் என்னென்ன பிரெளசிங் செய்தோம் என்பது ஹிஸ்ட்ரியில் இருக்காது. இதனால் பிரெளசிங் செய்தவர் பாதுகாக்கப்படுவார்.
 
ஆனால் இந்த வசதியை பலர் ஆபாச வீடியோவை பார்க்க பயன்படுத்துவதாக கூகுள் குரோம் கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் 'இன்காக்னிட்டோ' முறையில் ஆபாச வீடியோ பார்க்கும் நபர்களுக்கு அவர்களுடைய டிஸ்ப்ளேவில் ஒரு ஸ்மைலி தோன்றி எச்சரிக்கை செய்யும். மொபைல், டெக்ஸ்டாப், டேப்ளட், ஆண்ட்ராய்டு மொபைல், ஐஒஎஸ் மொபைல் என அனைத்துக்கும் வித்தியாசமான முறையில் இந்த ஸ்மைலி தோன்றி எச்சரிக்கை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் ஆபாச வீடியோவை அதிகம் பார்த்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மட்டும் யாரும் நினைத்துவிட வேண்டாம்