செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (17:58 IST)

ஹிஜாப் சரியாக அணியாததால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்: வெடித்த கலவரம்

hijab
ஹிஜாப் சரியாக அணியாததால் பயங்கரமாகத் தாக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கலவரம் வெடித்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
 
ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் அங்கு பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வர முடியாது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஈரானைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் டெஹ்ரானுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்று அங்கிருந்த போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசாரின் சித்திரவதையால் தான் தங்கள் மகள் இறந்து விட்டதாக பெற்றோர்கள் கூறிய நிலையில் கலவரம் வெடித்துள்ளது. பல பெண்கள் தங்கள் ஹிஜாபை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது