ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (18:58 IST)

சல்மான் ருஷ்டி கொல்ல முயன்ற நபருக்கும் ஈரானுக்கும் தொடர்பா?

salman rushdie
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொலை செய்ய முயன்ற நபருக்கும், ஈரானுக்கும் தொடர்பா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை கொல்ல நுழைந்த நபருக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது
 
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த வாரம் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் சல்மான் ருஷ்டியை கொல்ல கத்தியுடன் நுழைந்த மர்ம நபருக்கு ஈரானுக்கும் தொடர்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சல்மான் ருஷ்டியை கொலை செய்ய முயன்ற நபருக்கும் ஈரான் நாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஈரான் விளக்கமளித்துள்ளது.