1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: கைதான நால்வர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!

kaniyamur
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
கனியாமூர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் மாணவியின் மரணத்தை தொடர்ந்து கனியாமூர் பள்ளி அருகே கலவரம் மூண்டது
 
இந்த கலவரத்தை பயன்படுத்தி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் உத்தரவிட்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது