வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 11 மே 2016 (19:42 IST)

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ:22 கோடி: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளம்பெண்

மலேசியா நாட்டை சேர்ந்த இளம்பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக 2.3 மில்லியன் வரவு ஏற்பட்டது. அப்பணத்தில் பல வண்ணங்களில் கைப்பைகளும், ஆடைகளும் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளம்பெண்

 

 
கிறிஸ்டின் ஜியாக்சின் லீ(21) ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார். அவருக்கு வெஸ்ட்பெக் என்ற வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த வங்கி அவருடைய கணக்கில் தவறுதலாக 2.3 மில்லியன் பவுண்ட் அனுப்பியுள்ளது.
 
கிறிஸ்டின் அந்த பணத்தை எப்படி வந்தது என்று ஆராயாமல் தன் விருப்பம் போல் பிடித்த உடைகள், பல வண்ணத்தில் கைப்பைகள் வாங்கியதுடன், ஊர் சுற்றியும் செலவு செய்துள்ளார்.
 
அதுமட்டுமில்லாமல் மீதம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சிட்னியில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டார்.
 
மேலும் வழக்கு தொடர்பான விசாரணை  நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘வங்கியில் இருந்து தனக்கு சொந்தமில்லாத பணத்தை எடுத்து செலவு செய்த குற்றத்திற்காக நேரடியாக பெண் மீது குற்றம் சுமத்த முடியாது, இருந்தாலும் பணத்தை எடுத்து செலவு செய்வதற்கு முன்னதாக, அவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கியிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்’ என நீதிபதி கூறியுள்ளார்.   
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்