புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (17:19 IST)

செல்போனை சார்ஜ் போட்டு தலையணை அருகே வைத்து தூங்கிய சிறுமி பலி!

சார்ஜ் போட்டு தலையணைக்கு அருகே வைத்து தூங்கிய 14 வயது சிறுமி சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் பரிதாபமாக பலியானார்.
 
 
கசகஸ்தான் நாட்டில் ஆலு என்ற 14 வயது சிறுமி இரவில் தூங்கும் முன் செல்போனை சார்ஜ் போட்டு தலையணை அருகே வைத்துள்ளார். அந்த செல்போன் சார்ஜ் முழுவதும் ஏறி சூடாகியுள்ளது. இதனையடுத்து திடீரென அந்த செல்போன் வெடித்ததால் அருகில் தூங்கி கொண்டிருந்த சிறுமி ஆலு பரிதாபமாக உயிரிழந்தார்.
 
 
தலைக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்ததில் தலையில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 
செல்போனை தலையணைக்கு அருகில் வைக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. தலையணைக்கு அருகில் குறிப்பாக சார்ஜ் போட்டுவிட்டு தலையணைக்கு அருகில் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது