ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (14:56 IST)

அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!

5g modi
அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி இந்த சேவையை தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த இடத்தில் ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தீபாவளி முதல்  5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்த நிலையில் தற்போது அக்டோபர் 1ம் தேதி சேவை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அக்டோபர் ஒன்றாம் தேதி டெல்லியில் இந்தியா மொபைல் காங்கிரஸ் என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அன்றைய தினம் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டால் மிகப்பெரிய தொலைத்தொடர்பு புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது