ஒரே பிரசவத்தில் 10 முத்துக்கள்... 37 வயதிலும் இப்படியா??
தென்னாப்ரிக்காவை சேர்ந்த 37 வயதான பெண் ஒரு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பிறப்பதை அவ்வப் போது கேள்வி பட்டிருப்போம். ஏன், ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ள பெண்ணையும் பார்த்தோம்.
ஆம், மேற்கு அமெரிக்க நாடான மாலி என்ற நாட்டில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. 25 வயதான அவருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது பெண் ஒரு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
தென்னாப்ரிக்காவை சேர்ந்த 37 வயதான கோசியாம் தாமரா சித்தோல் என்ற பெண் ஒரே பிரசவத்தில் ஏழு ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளுக்கு பெற்றெடுத்துள்ளார். இந்த பெண் இதன் மூலம் முந்திய கின்னஸ் சாதனையை உடைத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.