1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (11:28 IST)

பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர்! – உலக தலைவர்கள் வாழ்த்து!

Elizebeth Borne
பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக நடந்து முடிந்த நிலையில் பெண் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் சமீபத்தில் பிரான்ஸ் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகபடியான வாக்குகள் பெற்ற இமானுவேல் மக்ரோன் மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் பிரான்சின் பிரதமராக பெண் அமைச்சரான எலிசபெத் பொர்னியை நியமித்துள்ளார் இமானுவேல் மக்ரோன். தொழிலாளர் துறை அமைச்சராக சிறப்பாக செயலாற்றிய எலிசபெத் பொர்னெ தற்போது நாட்டின் பிரதமராக ஆகியுள்ள நிலையில் மக்களும், பிற நாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் பிரான்சில் முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.