ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (20:45 IST)

வைன் மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி ஒதுக்கிய பிரான்ஸ்

french wine
பிரான்ஸ் நாட்டில் அதிபர்  இமானுவேல் மேக்ரன் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.
 

இந்த நாட்டில் வைன் உற்பத்தியாளர்களைக் காக்க ரூ.1700 கோடியை அரசு செலவிடுவதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பியாவில் மதுப்பிரியர்கள் மது அருந்தும் பழக்கம் பற்றி ஐரோப்பிய கமிசன் கடந்த ஜூம் மாதத்திற்கான ஒரு பட்டியல் வெளியிட்டது. இதில், வைன் அருந்தும் பழக்கம் சரிந்துள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவிதம், பிரான்ஸில் 15 சதவீதம், ஜெர்மனியில் 22 சதவிதம், போச்சுக்கல் நாட்டில் 34 சதவீதம் என்று குறிப்பிட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வைன் உற்பத்தி 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.  இதனால் மக்களின் வாங்கும் திறன் பொருளாதார காரணங்கள் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொழிற்சாலை அல்லாத வழியில் உருவாகும் பீரை பருகத் தொடங்கியுள்ளனர்.

எனவே, அளவுக்கு அதிகமான உற்பத்தி செய்யப்பட்ட வைன் மதுபானங்களை அழிக்க ரூ.1780 கோடியை பிரான்ஸ் அரசு ஒதுக்கியுள்ளது.

அதேசமயம் வைன் தயாரிப்பு தொழிலை மேற்கொள்பவர்கள் வேறு தொழிலை செய்யலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகிறது.