புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (20:49 IST)

அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்: வீதியில் தஞ்சம் புகுந்த கனடா மக்கள்

கனடா நாட்டில் ஒருசில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் தங்க பயந்து கொண்டு வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கனடா நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முதல் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டதாகவும், இது 6.6 என்ற ரிக்டர் அளவிலும் இருந்ததாகவும், இதனையடுத்து ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 6.8 ஆகவும் பதிவானதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மூன்றாவதாக அடுத்த அரை மணி நேரத்தில் கனடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் மீண்டும் அதே பகுதியில் 15 நிமிட இடைவெளியில் 4வது நிலநடுக்கமும் உணரப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது