இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்புக்கு இம்ரான்கான் கண்டனம்!
இந்தியாவில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்புக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் முகம்மது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த கருத்து தெரிவித்த பாஜக தொடர்பாளரை கண்டித்து வட இந்தியாவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் போராட்டம் செய்பவர்களின் மூளையாக செயல்படுபவர்களின் வீடுகளை கண்டுபிடித்து அந்த வீடுகளை அரசு இடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது
இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து போராடிய இந்திய இஸ்லாமியர்களின் வீடுகளை இந்திய அரசு அதிகாரிகள் தரைமட்டமாக்கியது அதிர்ச்சி அளித்துள்ளது என்றும் இது மனிதாபிமானமற்ற பாசிச செயல் என்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கன தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்