வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:00 IST)

திமுக எம்.பி மஸ்தான் கொலை வழக்கு! தம்பி தீட்டிய சதி அம்பலம்!

சென்னையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொல்லப்பட்ட வழக்கில் அவரது தம்பி செய்த சதி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை திருவெல்லிக்கேணியை சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி டாக்டர் மஸ்தான் கடந்த மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே தனது காரில் வந்துக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரும், கார் டிரைவருமான இம்ரான்பாஷாவை விசாரித்தபோது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனை அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் மஸ்தான் இறப்பில் மர்மம் நிலவுவதாக சந்தேகித்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரனையின் பேரில் டிரைவர் உட்பட 5 பேர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். அப்போது இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கவுசே ஆதம்பாஷா அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கவுசே ஆதம்பாஷாவை கைது செய்து விசாரித்ததில் அண்ணன் மஸ்தானுடன் பூர்வீக சொத்து, பணம் குறித்து தகராறு இருந்ததாகவும் அதனால் தனது நண்பர்கள் உதவியுடன் மஸ்தானை கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Edit By Prasanth.K