செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:26 IST)

முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 11 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்களின் இரத்தத்தை வேர்வையாக சிந்தி, குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்க்கின்றனர். ஆனால் இக்கால கட்டத்தில் மனசாட்சி இல்லாத சில பிள்ளைகள், பெற்றோர்கள் என்றும் பாராமல், அவர்களின் கடைசி காலத்தில் அவர்களை பராமரிக்காமல், முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.
 
இந்நிலையில் ஜப்பானின் சப்போரோ பகுதியில் முதியோர்களுக்கு,  குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் செயல்படுகிறது. இங்கு 16 முதியோர்கள் தங்கியிருந்தனர். இந்த இல்லத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். இருப்பினும் தீ மளமளவெனப் பரவியதால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். 
 
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும்  இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் 8 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். படுகாயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.