திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (10:55 IST)

தி நகரை மிஞ்சிய தீ: 27 மாடி குடியிருப்பு கட்டிடம் முழுவதும் சேதம்!!

லண்டன் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


 
 
கிரென்ஃபெல் டவர் எனும் அந்த குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ கட்டிடம் முழுக்க பரவியது. 
 
குடியிருப்புவாசிகள் பலர் கட்டிடத்தினுள் சிக்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
தீயை அணைக்கும் பணியில் 40 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.