திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:02 IST)

மதுபான பாரில் தீ விபத்து...32 பேர் உயிரிழப்பு...12 பேருக்கு தீவிரசிகிச்சை

Fire
வியட்நாம் நாட்டில் ஹோசிமின் நகரின் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டில் ஹோசிமின் நகரின் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். அந்த சமயம் அக்கட்டிடத்தில் 2 வது மாடியின் தீப் பிடித்தது. அக்கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், அங்கிருந்த மக்கள்  வெளியேற முடியாமல் தவித்தனர்.

சிலர் சூழ்ந்த புகையில் சிக்கினர். இந்த நிலையில், தீயின் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், சிலர் இரண்டாம் தளத்தில் இருந்து குதித்தனர்.  இதுகுறிந்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீயணை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இதில்,15 பெண்கள் உள்ளிட்ட 32 பேர் பலியாகினர்.  தற்போது, 12 பேர் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்ற்னர்.