செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (17:04 IST)

15 மாணவனுடன் வகுப்பறை, ஹோட்டல் என உல்லாசமாக இருந்த ஆசிரியை!

15 மாணவனுடன் வகுப்பறை, ஹோட்டல் என உல்லாசமாக இருந்த ஆசிரியை!

லண்டனை சேர்ந்த 23 வயதான ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆசிரியை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
லண்டனை சேர்ந்த அலிஸ் மெக்ப்ரியர்டி என்ற 23 வயதான இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக 15 வயது மாணவன் ஒருவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நட்பு நாளடைவில் தகாத உறவு வைக்கக்கூடிய உறவுமுறையாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜாலியாக காதலர்களாக சுற்றியுள்ளனர். அந்த ஆசிரியை ஹோட்டலில் ரூம் புக் செய்து மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார்.
 
மேலும் மாணவனுடன் வகுப்பறையில் வைத்து முத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். கார் பழுதுபார்க்கும் இடம், கார் போன்றவற்றில் வைத்தும் அந்த 15 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் அந்த ஆசிரியை.
 
ஆசிரியையும், மாணவனும் இந்த உறவுமுறையில் இருப்பது மாணவனின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆசிரியை நிறுத்தி விசாரித்தனர். இந்த விசாரணையில் ஆசிரியை தனது தவறை ஒத்துக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.