புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (20:55 IST)

உலகில் அதிவேகமாக காரை ஓட்டும் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் !

உலகில் அதிவேகமாக காரை ஒட்டுபவர் என்ற பெயரை எடுத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த  ஜெஸிகா கோம்ப்ஸ் என்ற பெண்மணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜெஸிகா கோம்ப்ஸ் என்ற பெண்மணி, ஜெட் விமானத்திற்கு உபயோகப்படுத்தும் என்ஜின்களை காரில் பயன்படுத்தி  அதிவேகமாக காரை ஓட்டுவதில் பேர் பெற்றவர் ஆவார்..
 
கடந்த  2013 ஆம் ஆண்டில் இவர் 398 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்தார். அதன்பின்னர் 483 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி தான் முன்னர் நிகழ்த்திய சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் தனது முந்தைய சாதனையை முறியடிக்க்க நினைத்த ஜெஸிகா, அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தத அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது பெரும் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.