ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (16:28 IST)

பிரபல ஹாலிவுட் தம்பதி விவாகரத்து.! 4வது கணவரையும் பிரிந்த நடிகை.!!

Jennifer Lopez
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது ஹாலிவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 
 
அவர்கள் ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். இந்த நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 
 
அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார். 

 
ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.  விவாகரத்து தொடர்பான அறிக்கையை இந்த நட்சத்திர தம்பதி இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.