1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 22 மார்ச் 2023 (14:58 IST)

ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்த நிர்வாகிகள்

admk
ஓ.பி.எஸ் அணியின் கரூர்  மத்திய நகர அவைத்தலைவர் குணசேகரன் அவர்கள், மத்திய நகர துணை செயலாளர் ராஜ் அவர்கள், வெங்கடேசன் அவர்கள் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தாய் கழகத்தில் இணைந்துகொண்டனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், ஓ.பி.எஸ் அணியின் கரூர்  மத்திய நகர அவைத்தலைவர் குணசேகரன் அவர்கள், மத்திய நகர துணை செயலாளர் ராஜ் அவர்கள், வெங்கடேசன் அவர்கள் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி இடைகால பொது செயலாளரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் தங்களை தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
 
உடன் கரூர் மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி, பகுதி கழக துணை செயலாளர் அழகர்சாமி, பகுதி கழக பொருளாளர் சிங்கார வெங்கட்ரமணன், 31 வது வார்டு கழக செயலாளர் கோவிந்த ராஜ், முன்னாள் வார்டு கழக அவைத்தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.