திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (15:33 IST)

இந்தியர்களுக்கான விசா கட்டுபாடுகளை தளர்த்தும் இங்கிலாந்து!

இந்திய மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான விசா கட்டுபாடுகளை இங்கிலாந்து அரசு தளர்த்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் ஆன் மேரி ட்ரிவெலியான் விரைவில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு நாட்டுக்கும் இடையே தடையில்லா வர்த்தகத்தை செயல்படுத்தும் விதமாக சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்றாக இந்தியர்கள் இங்கிலாந்து விசா பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவையும் இங்கிலாந்து எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்திய மாணவர்கள், வேலைதேடும் இளைஞர்கள் ஆகியவர்கள் எளிதாக விசா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.