வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (13:47 IST)

ராணி எலிசபெத் முகமது நபியின் வம்சாவளி? சர்ச்சையை கிளப்பும் ஆய்வறிக்கை!

இங்கிலாந்த் ராணி எலிசபெத் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபிகளின் வம்சாவளி என்ற வறலாற்று ஆய்வறிக்கை வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பான ஆய்விற்கு ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினரை உட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியாகியது. அதில் ரானீ எலிசபெத் முகமது நபியின் மகள் பாத்திமாவுக்கு ரத்த உறவு என செய்தி வெளியிடப்பட்டது. 
 
தற்போது இந்த் ஆய்வறிக்கைக்கு பின்னணியில் உள்ள ரகசியம் இங்கிலாந்தை சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும், இந்த நிகழ்வு இஸ்லாமியர்களுக்கு பெருமையான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், இந்திலாந்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், இது இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கும் என் ஆய்வாலர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.