ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (07:23 IST)

உக்ரைன் மீதான போரை நிறுத்தினால் புதின் கொல்லப்படுவார்: எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்..!

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யா அதிபர் புதினுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஒருவேளை அவர் போரை நிறுத்தினால் அவர் கொலை செய்யப்பட கூட வாய்ப்பு இருப்பதாகவும் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் இந்த போரில் ஜெயிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது என்றும் ஆனால் அது நடக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்நாட்டிற்கு ஏராளமான நிதி உதவி கிடைத்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிதி உதவி நாட்டின் போர் வெற்றிக்கு பயன்படாது என்றும்  இரு நாட்டின் போரை தடுத்து உயிர் இழப்புகளை குறைப்பதே என்னுடைய பணியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு போரை நிறுத்த சிலர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆனால் போரை நிறுத்தினால் புதின் கொல்லப்படுவார் என்பதால் தான் அவர் போரை நிறுத்த தயங்கி வருவதாகவும் எலான் மஸ்க் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Edited by Siva