1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (15:14 IST)

உலக பணக்காரர் பட்டியல்.. முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்: ஓவர்டேக் செய்தவர் யார்?

கடந்த சில ஆண்டுகளாக உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அந்த இடத்தை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் முன்னேறியிருக்கிறார். இவரது நிறுவனத்தின் பங்குகள் 30 சதவீதம் அதிகரித்ததால் முதலிடத்தை பெற்றுள்ளார். பிறகு, 2023 ஆம் ஆண்டில் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


போர்ப்ஸ் அறிக்கையின்படி, உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், இரண்டாம் இடத்தில் எலான் மஸ்க் உள்ளனர்.

அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலஎ என்றும்,  எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 204.5 பில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் உள்ள முதல் 10 நபர்கள்:

பெர்னார்ட் அர்னால்ட்
எலான் மஸ்க்
ஜெஃப் பெசோஸ்
லாரி எலிசன்
மார்க் ஜுக்கர்பெர்க்
வாரன் பஃபெட்
லாரி எலிசன்
பில் கேட்ஸ்
செர்ஜி பிரின்
ஸ்டீவ் பால்மர்

Edited by Siva