வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (11:55 IST)

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்.. சிறுவர்கள் 3 பேர் உட்பட 7-பேர் பலி.!

ukrain attack
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் சிறுவர்கள் மூன்று பேர் உள்பட ஏழு பேர் பலியானார்கள். மேலும் இந்த தாக்குதலில் 50 பேர் காயம் அடைந்தனர்.
 
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது.  
 
ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன.  ஆரம்பத்தில் புடினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.
 
பின்னர் ஜெலென்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.  இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது நிகழ்ந்துள்ளது. 


இது குறித்து பேசிய பிராந்திய ஆளுநர் ஒலே சினீஹுபொவ், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 சிறுவர்கள், உட்பட 7 பேர் பலியானதாகவும், 50- க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.