ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (12:08 IST)

எலான் மஸ்க் கலாய்க்கும் ட்வீட்.. டிரெண்டிங்கில் 7 வருடத்திற்கு முன் வந்த தமிழ் திரைப்படம்..!

எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவு செய்த ஒரு மீம்ஸ் வைரல் ஆகி வரும் நிலையில் 7 வருடத்திற்கு முன் வெளியான தமிழ் திரைப்படம் திடீரென ட்ரெண்டிங்கில் உள்ளது. 
 
உலகின் நம்பர் ஒன் தொழிலதிபர் எலான் மாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் போன் மற்றும் ஏஐ டெக்னாலஜி ஆகியவற்றை கலாய்த்து ஒரு மீம்ஸ் போட்டுள்ளார். அந்த மீம்ஸ் உள்ள புகைப்படம் தமிழ் திரைப்படத்தை சேர்ந்தது என்பதை அடுத்து அந்த படம் தற்போது திடீரென ட்ரெண்டிங்கில் உள்ளது. 
 
ஏழு வருடங்களுக்கு முன் அதாவது 2017 ஆம் ஆண்டு துரை சுகுமார் என்பவர் நடிப்பில் உருவான ’தப்பாட்டம்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியானதே பலருக்கும் தெரியாத நிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை எடுத்து தான் எலான் மஸ்க் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். 
 
இந்த மீம்ஸ் ட்ரெண்டானதை அடுத்து இது தமிழ் திரைப்படம் தப்பாட்டம் என்று எலான் மஸ்க் அவர்களுக்கு பலர் குறிப்பிட்ட உள்ளதை அடுத்து இந்த படம் தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு திடீர் என ட்ரெண்டிங்கில் உள்ளது.
 
Edited by Mahendran