1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:16 IST)

நான் சும்மா ஜோக் பண்ணேன்.. எந்த டீமையும் வாங்கல! – Fun பண்ணிய எலான் மஸ்க்!

மான்செஸ்டர் யுனிடெட் கால்பந்து அணியை எலான் மஸ்க் வாங்க போவதாக தான் சொன்னது ஜோக் என அவர் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

உலகின் டாப் கோடீஸ்வரர்கள் வரிசையில் முக்கியமானவராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்க முடிவு செய்ததும், பின்னர் பின்வாங்கியதும் உலக அளவில் வைரலானது.

இந்நிலையில் தற்போது பிரபல கால்பந்து க்ளப் அணியான மான்செஸ்டர் யுனிடெட் அணியை தான் வாங்க போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பெரும் வைரலானது. கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் இந்த அணியை எலான் மஸ்க் வாங்க போவதாக சொன்ன நிலையில் சில மணி நேரங்கள் கழித்து அதை தான் சும்மா ஜோக்குக்காக சொன்னதாக அவரே பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த Fun பண்றோம் ஆக்டிவிட்டியால் சில மணி நேரங்களில் சமூக வலைதளங்கலும், கால்பந்து ரசிகர்களும் பரபரப்பில் ஆழ்ந்து விட்டனர்.