புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (00:04 IST)

இலங்கைக்கு 76 கோடி ரூபாய் வழங்கிய உலக வங்கி

srilanka
உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
 
இலங்கை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண மருந்து வகைகளை தொடர்ந்து விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உரிய நேரத்தில் கடன் பத்திரங்களை விநியோகிக்க முடியாமையினால், சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.
 
இதன்படி, இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சில இது உங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கம் தெரிவித்த நிலையில், தற்போது உலக வங்கி கடன் உதவி செய்துள்ளது.
 
இந்திய நிவாரண கடன் வசதியின் கீழ், இந்த கடன் பத்திரத்தை விநியோகித்து மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் ஒரு நடைமுறை என சுகாதாரத்துறை கூறுகின்றது.
 
மேலும், மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதை தவிர்த்து, மருந்து விநியோகத்திற்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சகம் கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளனர்.
 
தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு நிதி உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை குடிமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.