1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2018 (19:04 IST)

தைவானை உருகுலைத்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 247 பேர் காயம் அடைந்தனர். 88 பேரைக் காணவில்லை. மேலும் பல கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன.
 
நேற்றிரவு தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை நகரான ஹூலியனில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டது.
 
இதில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது, பல அடுக்குமாடி கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன, மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்பு குழு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் 247 பேர் காயம் அடைந்துள்ளனர் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.