1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:34 IST)

சாலமன் தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!!

பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டமான சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


 
 
சாலமன் தீவின் தலைநகர் ஹோனியாராவுக்கு வடக்கில் 70 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.
 
இதைத் தொடர்ந்து சாலமன் தீவுக்கு அருகில் உள்ள பாபுவா நியூ கினியா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பூகம்பம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதி நிலவுகிறது.