செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (22:24 IST)

கலிஃபோர்னியாவில் நில நடுக்கம் ! மக்கள் பீதி

earthquake
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்தோனேஷியா, சீனா, நேபாளம் ஆகிய  நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்டு  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பெர்ண்டேல் பகுதியில் கடலில் 10 கிமீ ஆழத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 புள்ளியாகப் பதிவாகியுள்ளது.

இதில், கட்டிடங்கள் அதிர்வு ஏற்பட்டதாகவும் வீட்டுகள் இடிந்துள்ளதாகவும், இந்த விபத்தில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.