சூரிய கிரகணத்தின்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சிலி நாட்டில் பரபரப்பு!
2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நேற்று நடந்த நிலையில் இந்த கிரகணத்தை பார்க்க பலர் ஆர்வம் கொண்டனர் என்ற தகவல் வந்துள்ளது
உலகின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் மட்டும் இந்த சூரிய கிரகணம் முழு அளவில் தெரிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் நேற்றைய சூரிய கிரகணத்தின்போது சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலி நாட்டில் சூரிய கிரகணத்தின்போது ரிக்டர் அளவில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கம் குறித்த விவரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அந்நாட்டில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
இதுவரை கேள்விப் படாத வகையில் சூரிய கிரகணத்தின் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது சிலி நாட்டில் மட்டுமன்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது