புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (17:36 IST)

கலிஃபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாநிலத்தில் நவேடாவின் பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் சுதந்திர தினமான நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டதால் அனைவரும் வீட்டிலேயே இருந்தனர்.

இந்நிலையில் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கில் 240 கிமீ தொலைவில் உள்ள கலிஃபோர்னியாவின் ரிட்ஜ்கெர்ஸ் எனும் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ரிட்ஜ்கெர்ஸ் பகுதியில் உள்ள இரு வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் பல கடைகள், நிறுவனங்கள் சேதம் அடைந்தன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவானது. கடந்த 20 ஆண்டுகளில் கலிஃபோர்னியாவில் இது போன்ற நிலநடுக்கம் ஏற்படவில்லை என அமெரிக்கா புவியியல் துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.