வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (09:21 IST)

ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனே வெளியேறுங்கள்: ஜோ பைடன் உத்தரவு..!

ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் போர் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்கா பத்திரிகையாளரை ரஷ்யா கைது செய்துள்ளது 
 
இதனை அடுத்து ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ரஷ்யாவுக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் சுற்றுப்பயணம் மற்றும் தொழில் முறையாக எந்த விதமான பயணமும் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்க அறிவுறுத்தி உள்ளது. 
 
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva