காவல்துறை குறித்து அவதூறு வசனங்களுடன் ரீல்ஸ்.. மதுரையில் இரு இளைஞர்கள் கைது..!
காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மதுரையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரிலீஸ் என்னும் வீடியோவை ஒளிபரப்பும் வழக்கம் இளைஞர்களுக்கு அதிகமாக இருந்து வருகிறது என்பதும் அதில் சில சர்ச்சைக்குரிய வகையில் இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மதுரையில் காவல்துறையின் வாகனத்தின் பின்னால் பைக்கில் சென்று வீடியோ எடுத்து அவதூறு வசனங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்ட புகார்களும் இருந்த நிலையில் இருவரும் ஏதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த இரண்டு இளைஞர்கள் ஜாமினில் வெளிவந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
.
Edited by Mahendran