செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (15:15 IST)

முதலைகள், பாம்புகள் ஊறும் தடுப்பு அகழி: டிரம்ப் இவ்வளவு மோசமானவரா?

எல்லையில் ஊடுருவலை தடுக்க அகழி அமைத்து அதில் முதலைகள், பாம்புகளை தாம் விடச்சொன்னதாக வெளியாகிய தகவலை டிரம்ப் மறுத்துள்ளார். 
 
3,145 கிமீ நீளம் உள்ள அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லையில் ஏற்கனவே தடுப்பு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அகதிகள் பலர் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 
 
எனவே, தேர்தலின் போதே டிரம்ப் மெக்சிகோ - அமெரிக்கா எல்லையில் சுவர் எழுப்படும் என தெரிவித்தார். அதற்கேற்ப எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். 
இந்நிலையில், நியூயார்க் டைம்ஸில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எல்லை வழியே நுழையும் அகதிகளை காலில் சுட வேண்டும் எனவும், ஊடுருவல்களை தடுக்க எல்லையில் முதலைகள், பாம்புகள் நிரைந்த அகழிகளை தோண்டி வைக்க வேண்டும் எனவும் கூறியதாக செய்தி தெரிவிக்கிறது. 
 
ஆனால், டிரம் இந்த செய்தியை மறுத்துள்ளார். அதோடு முதலைகள், பாம்புகள் அகழியை தோண்ட நான் கூறவில்லை எனவும் அந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.